கோவை குண்டுவெடிப்பு – குற்றவாளி பாட்ஷா மருத்துவமனையில் அனுமதி!

Al-Umma chief S.A. Basha

பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பும்போது பாட்ஷாவுக்கு நெஞ்சு வலி் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷா உடல்நலகுறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பும்போது நெஞ்சு வலி் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் – உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு சமீபத்தில் பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் முடிந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் சிறைக்கு திரும்போது திடீரென நெஞ்சு வலி் ஏற்பட்டதால் குற்றவாளி பாட்ஷா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்