இந்த தேதிகளில் ‘கனமழைக்கு’ வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 1ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 30ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே 1ம் தேதி கோவை,நீலகிரி,ஈரோடு,தேனி, திண்டுக்கல் நாமக்கல்,கரூர், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை
சென்னை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
July 9, 2025