கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கிறிஸ்தவ மதம் மாறிய வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதாவது, கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின இடஒதுக்கீடு உரிமைகளை வழங்கக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேபோல, கிறிஸ்தவ மதம் மாறிய வன்னியர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்க்கொண்டார்.
இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மக்ககளின் படிப்பில், வேலைவாய்ப்பில், உதவித்தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இந்துக்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சட்ட அமைப்பு உள்ளது. கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் இதனை பயன்படுத்துவது முடியாது.
ஆதிதிராவிட கிறிஸ்தவ மக்களுக்கு சலுகைகள்:
இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி, சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கும் சலுகைகள் வழங்கும்படியாக, இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அது நிரைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.