நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 200 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்து.
KKR VS RCB [Image Source : Twitter]இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து போட்டி முடிந்தவுடன் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான் என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
virat kohli [Image Source : Twitter]இது தொடர்பாக பேசிய அவர் ” இந்த போட்டியில் நிறைய தவறுகள் செய்து, எதிரணிக்கு நாங்களே வெற்றியை கொடுத்துவிட்டோம். எங்களுக்கு இந்த தோல்வி தேவைதான். நாங்கள் சரியாக விளையாடவில்லை, எங்களுடைய அணியில் பீல்டிங் சரியாக இல்லை.
Virat Kohli VK [Image Source : IPL WEBSITE]பீல்டர்கள் ராணாவுக்கு இரண்டு முறை கேட்சுகளை விட்டு வாய்ப்பு கொடுத்தனர். அதேபோல் ஜேசன் ராய் கேட்சையும் நழுவ விட்டோம். நாங்களே எங்களுடைய வெற்றிக்கான வாய்ப்புகளை தவறவிட்டோம். எங்களால் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. இது தான் எங்களுடைய தோல்விக்கு ” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.