நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

naamtamilarpartycasekovai

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடுபாவனம் கார்த்தி மீது கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி மீது கோவை உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 6-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. பொது கூட்டத்தில் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் உதவி ஆய்வாளர் ரேணுகா தேவி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இடும்பாவனம் கார்த்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்