நக்சலைட் தாக்குதலில் 11 ராணுவ வீர்ரகள் உயிரிழப்பு..! சத்திஸ்கர் முதல்வரிடம் பேசிய அமித்ஷா..!

Default Image

11 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து சத்திஸ்கர் முதல்வரிடம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

சதீஷ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அரன்பூர் டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சலைட் தாக்குதல் 

naxalites

நக்சல்கள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 11 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கர் முதல்வரிடம் கேட்டு அறிந்தார். மேலும், அந்த தொலைபேசி உரையாடலில், உள்துறை அமைச்சர் சத்தீஸ்கர் முதல்வரிடம், மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்