உத்தரகாண்ட் போக்குவரத்து துறை அமைச்சர் காலமானார்!

உத்தரகாண்ட் போக்குவரத்து துறை அமைச்சர் சந்தன் ராம் தாஸ் காலமானார்.
உத்தரகாண்ட் போக்குவரத்து துறை அமைச்சர் சந்தன் ராம் தாஸ் (63 வயது), பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையில் காலமானார். சந்தன் ராம் தாஸின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, பாகேஷ்வர் மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
தனது அமைச்சரவை சகாவின் திடீர் மரணத்திற்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், தாஸின் மறைவுச் செய்தியால் “அதிர்ச்சியடைந்தேன்” என்றும் இவரது மரணம் அரசியல் மற்றும் சமூக சேவைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் தெரிவித்துள்ளார்.