எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் தடை!

தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், எஸ்ஐ, தலைமை காவலர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருட்டு வழக்கில் கைதான 3 பேரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது .
பின்னர் எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய ஆணையம் ஆணையிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவல்துறையினர் தொடர்ந்த வழக்கில் ஆணையிட்டுள்ளது.