karunagarajan [Imagesource : ABPnadu]
அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை என கருநகராஜன் பேட்டி.
சென்னையில் கருநகராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணாமலைக்கு எதிரான அதிமுகவின் கண்டன தீர்மானத்தை எதிர்க்கிறோம். சி.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை; சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் மனம்போன போக்கில் பேசுகின்றனர்.
மாநிலத்தலைவர் அண்ணாமலையில் கருத்தும், தமிழ்நாடு பாஜகவின் கருத்தும் வேறு வேறு இல்லை; ஜெயலலிதாவுக்கு என்றும் நாங்கள் மரியாதை கொடுப்போம். அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை. அண்ணாமலை பொம்மை தலைவர் அல்ல, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்.
அண்ணாமலையை பொம்மையென செல்லூர் ராஜு கூறியது தான் கோமாளித்தனமாக உள்ளது. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜக தான் உதவியது. அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழகத்தில் மாபெரும் மரியாதை உள்ளது. அண்ணாமலை மீது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு பொறாமை உள்ளது. அதனால் தான் அண்ணாமலையை இவ்வாறு பேசுகின்றனர்.
யார் யாருக்கு சுமை, யார் யாரை சுமந்தனர் என்பது மக்களுக்கு தெரியும். கூட்டணியை தீர்மானிக்க இன்னும் காலம் உள்ளது. கூட்டணியை முடிவு செய்வது பாஜக தலைமை. கூட்டணி என்பது பொதுவான ஒன்று. கூட்டணியில் பெரியண்ணன் என்பது இல்லை. ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதிமுகவின் இந்த செயல் திமுகவுக்கு வாய்ப்பளித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…