ஆறு வழி பசுமை வழி சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி…!

சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆறு வழி பசுமை சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று சத்தீஷ்கர் மற்றும் உத்தரப்பிரதேசம் சொல்கிறார். இந்த நிலையில் இரண்டு மாநிலங்களிலும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் ஆறு வழி பசுமை சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை ஆறு வழி பசுமை சாலை அமைந்துள்ளது. சத்தீஷ்கர் -ஆந்திராவை இணைக்கும் இந்த ஆறு வழி பசுமை வழி சாலை திட்டத்தின் மதிப்பீடு ரூ.3750 கோடி ஆகும்.
சத்தீஷ்கர் உதாந்தி வன சரணாலயம் வழியாக 2.8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறு வழி பசுமைசாலை போடப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 2.8 கிலோமீட்டர் தூரம் வரை 27 இடங்களில் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆறு வழி சாலையை கடக்க குரங்குகளுக்கு 17 இடங்களில் மரத்தினால் ஆன சிறிய வகை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, சத்திஷ்கர் வளர்ச்சியில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறது. மாநில மக்களின் தேவைகளை பாஜக அறிந்துள்ளது. சத்தீஸ்கரை கொள்ளையடித்து நாசமாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.