அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நாளை மாலை 4:30 மணிக்கு தேர்தல் தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்பும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். அதிலும், […]
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் புயல் தீவிரமடைந்தபோது, போட்டி நிறுத்தப்பட்டதாகவும் நடுவர் ஆட்டத்தை நிறுத்திய பிறகு, வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி வீரர்கள் சிலர் அப்படியே கீழே விழும் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அதில், 39 வயதான கால்பந்து […]
கனடா : பிராம்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து சபா கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்து பக்தர்கள் மீது, கம்புகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், கனடாவில் ஹிந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா அதிருப்தியை […]
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் பெரிய தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் தீவிரமாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு யார் அதிபர் ஆகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முந்தியைக் கருத்துக் கணிப்புகளும் நடந்து முடிந்தது. அதில், டோனால்ட் டிரம்ப்க்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமெரிக்காவின் (Iowa) அயோவாவில் நடந்த கருத்துக் […]
வாஷிங்க்டன் : நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை நடைபெற இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கும் இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாகத் துணை அதிபரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில், அமெரிக்க ஜனத்தொகையில் சுமார் 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதியுடன் தயாராக உள்ளனர். அதில், 7 கோடிக்கும் மேல் உள்ளவர்கள் தங்களது வாக்கைச் செலுத்தி […]
ஸ்பெயின் : கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பலரை மீட்புக் குழுவினருடன் ராணுவத்தினரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, வீதிகளில் […]
அமெரிக்கா : வேற்றுகிரகவாசிகள் பூமியில் இருக்கிறார்களா இல்லையா? என்கிற கேள்வி விடை தெரியாத மர்மமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த நீண்ட நாள் மர்மங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நாசாவின் தொடர்புடையாளர் திரைப்பட தயாரிப்பாளர் சைமன் ஹாலண்ட் கடந்த மாதம் “வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சான்றுகளைப் பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அது வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருந்தார். இவர் பேசியதற்கு முன்னதாகவே, அதாவது கடந்த ஜூன் மாதம் ஏலியன் இருப்பது குறித்து […]
தெஹ்ரான் : ஈரானில், 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டமானது கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, ஈரானில் ஒரு ஆண்டில் மட்டும் 15 வயதுக்கு குறைவான சுமார் 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அதே போல, அந்த நாட்டில் 10 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும், […]
பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து லெபனானில் உள்ள அதிகாரப்பூர்வ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நடந்த இந்த வான்வெளித் தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கப்பட்டுள்ளது. இதன் இடிபாடுகளை அகற்றி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி லெபனானின் நடுவில் […]
வாஷிங்க்டன் : வரும் நவம்பர்-5 ம் தேதி அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை இருவரும் தீவிரமாய் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், கமலா ஹாரிஸுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வாழும் இந்து […]
காசா : கடந்த வருடம் அக்-7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே சுமார் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் காசாவின் பீட்லாஹியா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் […]
வாஷிங்க்டன் : கடந்த 5 மாதங்களாகச் சர்வதேச விண்வெளியிலிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதாரண ஒரு சோதனைக்காக விண்வெளி சென்ற இவர், திரும்பப் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளார். மேலும், அதோடு தற்போது அடுத்தகட்ட ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உலகம் முழுவதும் நாளை மறுநாள் (அக்-31, வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையாகப் பார்க்கப்படும் இது, உலகம் முழுவதும் பரவி உள்ள ஹிந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு […]
தெஹ்ரான் : ஈரானின் தலைநகரான தெஹ்ரான் பகுதியில், கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிக்கும் தளங்களை என ஈரான் ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த காசா-இஸ்ரேல் போரில், ஆதரவாக ஹிஸ்புல்லாக்களும், ஹமாஸ் அமைப்பும் களமிறங்கியது. இந்த விளைவாக இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய […]
இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா விதிகளுக்கு எதிரானது. ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க […]
அமெரிக்கா : ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு, இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 தேதி நடந்த தாக்குதலுக்கு தற்காப்பாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரானின் இராணுவ […]
இஸ்ரல் : ஈரானின் “இராணுவ இலக்குகள்” மீது, இன்று (அக்டோபர் 26) அதிகாலையே துல்லியமான வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அதன்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2 ஆம் தேதி ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது, 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி […]
லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர். இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WATCH | Leh, Ladakh | On the agreements […]
வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தனித் தனியாக ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இருவருக்கும் ஒபாமா, எலான் மஸ்க் போன்ற பெரிய பெரிய ஆட்களும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, டோனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவளிப்பவர்களில் ஒருவருக்குத் […]
துருக்கி : தலைநகர் அங்காரா அருகே துருக்கியின் உயர்மட்ட பாதுகாப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மும்பைத் தாக்குதல் சம்பவம் போல நடந்த இந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்த தகவலின்பேரில் விரைந்து வந்து 2 தீவிரவாதிகளை துருக்கி பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இதனையடுத்து, இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இடங்கள் மீது, பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று […]
இலங்கை : இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையே கடந்த ஒரு வருடமாகப் போரானது நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து குறிவைத்துத் தாக்கினார்கள். இதில், சமீபத்தில் கூட இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் உயிரிழந்தார். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் உச்சம் பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது இலங்கையில் கடலோர பகுதிகள் மற்றும் […]