அறிவியல்

#Chandrayaan-3 : முக்கிய கட்டத்தில் சந்திராயன்-3.! விண்கலத்தில் இருந்து பிரிந்து செல்லும் லேண்டர்.!

Published by
மணிகண்டன்

சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி, முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் மூன்று முறை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், நேற்று நான்காம் கட்ட (இறுதி கட்ட) சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

சுற்றுப்பாதை குறைப்பு:

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

இறுதிகட்ட சுற்றுவட்டப்பாதை :

அதன்படி, நேற்று இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். சந்திராயன்-3இன் ப்ராபல்ஷன் பகுதி மற்றும் லேண்டர் பகுதி ஆகியவை தனித்தனி பயணங்களுக்கு தயாராகி வருவதற்கான நேரம் என குறிப்பிடப்பட்டு இருந்தன.

இன்றைய நிகழ்வு…

விண்கலத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 17, 2023) லேண்டர் பகுதியானது பிரிக்கப்படும் என இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. லேண்டர் பகுதி பிரிக்கப்படும் நிகழ்வானது சந்திராயன்-3 நிகழ்வில் மிக முக்கிய நிகழ்வாக எதிர்பாக்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

3 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

4 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

4 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

5 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

6 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

6 hours ago