CentralGovt [File Image]
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்துதல், நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நேரலையில் காணலாம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
அதன்படி, தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண சிறப்பு ஏற்பாடு செய்யுமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…