harvest moon [Image source : WDBJ]
இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் என்று அழைக்கப்படும் ‘அறுவடை நிலவு’ (harvest moon) இன்றும், நாளையும் (செப்.29, வெள்ளிக்கிழமை) தெரிகிறது. இந்த சூப்பர் முன் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் அறுவடை நிலவு என்று அழைக்கப்படுகிறது.
சூப்பர் மூன் (முழு நிலவு)
அதாவது, நிலவானது பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதனால், நிலவு ஒரு புள்ளியில் பூமிக்கு அருகிலும், மற்றோறு புள்ளியில் தூரத்திலுலும் சுற்றி வரும். அப்போது, பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது, முழுநிலவாக உருவெடுக்கும் இந்த நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று கூறப்படுகிறது. இந்த ஒரு சூப்பர் மூன் மற்ற நேரங்களை விட, சற்று 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும் என கூறப்படுகிறது.
சூப்பர் மூன் என்பது ஒரு வகையான முழு நிலவு என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், நிலவு பூமியிலிருந்து சுமார் 363,104 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். சூப்பர் மூன்கள் பெரும்பாலும் வானியல் நிகழ்வுகளாகக் ரசிக்கப்படுகின்றன.
எங்கெல்லாம் தெரியும்
ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக மூன்று அல்லது நான்கு சூப்பர் மூன்கள் தோன்றுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் நான்கு சூப்பர் மூன்கள் தோன்றியது. இந்த ஆண்டில் நிகழ்ந்த 3 சூப்பர் மூன்கள் இந்தியாவில் தெரிந்தது. நாளை தோன்றும் 4வது சூப்பர் முன் (அறுவடை நிலவு) இந்தியாவில் தெரியாது. இந்த முழு நிலவு (அறுவடை நிலவு) வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து பார்க்க முடியும்.
அறுவடை நிலவு எப்போது தோன்றும்
இந்த ஆண்டு, அறுவடை நிலவு இன்று (செப். 28) வியாழன் அன்று சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு தோன்றும். மேலும், நாளை (செப். 29 ) வெள்ளிக்கிழமை காலை 5:57 ET (09:57 GMT) மணிக்கு முழு நிலவாக தெரியும்.
அறுவடை நிலவு (harvest moon)
இலையுதிர் காலத்தின் போது, தோன்றும் இந்த நிலவு முழு நிலவு, பூமியிலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கோணம் 180 டிகிரிக்கு சமமாக இருக்கும் போது ஏற்படுகிறது. மேலும், இந்த அறுவடை நிலவு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் தெரியும்.
இது இலையுதிர் காலம் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பயிர்கள் அறுவடை செய்யும் காலமாகும். முந்தைய காலகட்டத்தில், இலையுதிர் காலத்தில் முழு நிலவின்போது, அறுவடை நாளாக கொண்டாடப் பட்டுள்ளது.
அதாவது, இந்த சூப்பர் மூன், விவசாயிகள் கோடையில் பயிரிடப்பட்ட தங்கள் பயிர்களை அறுவடை செய்யும் பொழுது, மாலை நேரங்களில் கூடுதல் நிலவொளியைக் கொடுத்து உதவுகிறது. எனவே, இது அறுவடை நிலவு என்று அழைக்கப்படுகிறது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…