ஜமைக்கா வந்து என்னை சந்தித்து சந்தோசத்தை உணருங்கள் என்று அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் அழைப்பு விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக டிம் பெய்ன் பொறுப்பேற்றுள்ளார். தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் 3வது […]
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சூத்திரதாரியாக கருதப்பட்டவர் டேவிட் வார்னர். அவருக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கு […]
தென் ஆப்ரிக்கா அணி வீரர் இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி மட்டும் தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு […]
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற நிலையில் கிரிக்கெட் உபகரணங்களை அவரின் தந்தை குப்பைக் கிடங்கில் தூக்கி எறிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு தண்டனையாக ஸ்மித், வார்னருக்கு 12 மாதங்கள் தடையும், கேமரூன் 9 மாதங்களையும் விதித்து ஆஸ்திரேலிய […]
டில்லியில் உள்ள பிரிட்டிஷ் துாதரகம் கோஹ்லி, மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் சென்று வந்தனர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இவருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. தேனிலவுக்காக பின்லாந்து சென்று வந்தனர். அடுத்து, மும்பை, டில்லியில் திருமண வரவேற்பு தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்ற கோஹ்லி, தற்போது ஐ.பி.எல்., தொடருக்கு தயாராகி வருகிறார். இதனிடையே, தனது மனைவி அனுஷ்காவுடன் டில்லியில் உள்ள பிரிட்டிஷ் துாதரகத்துக்கு சென்று வந்துள்ளார் கோஹ்லி. இதற்கான […]
திங்கள்கிழமை (ஏப்ரல் 2-ம் தேதி) 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல்போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, […]
இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை கிண்டல் செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து நியூசிலாந்து வீரர் டெய்லரும் கிண்டல் செய்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிருக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதன் எதிரொலியாக கேப்டன் பதவியை ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியை வார்னரும் இழந்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் […]
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான 11வது சீசன் வரும் 7ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஐதரபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்டில், சக வீரரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு துணை போன இவருக்கு, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத் அணியில் இருந்து […]
மகேந்திர சிங்க் தோனி ‘கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ‘பினிஷிங்’ செய்துள்ளார். தினேஷ் கார்த்தியை இவருடன் ஒப்பிட வேண்டாம்,” என, ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. இரு உலக கோப்பை (2007, 2011) வென்று தந்தவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த ‘பினிஷர்’ என்ற பெயர் பெற்றவர். இதனிடையே, சமீபத்தில் நடந்த முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் பைனலில் (எதிர்-வங்கதேசம்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் […]
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.சென்னை வந்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் தற்போது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது.அதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர். […]
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச், இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மனைவி ஹசின் ஜகான் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹசின் ஜகான் இன்று கொல்கத்தாவில் முதலமைச்சர் […]
மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல் டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.இது குறித்து அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு கூறியபோது, “நான் இப்போது விராட் கோலியின் பேட்டை பயன்படுத்துகிறேன்” என்றார். 2014-ல் இங்கிலாந்து […]
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் துவங்குகிறது.இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆக்லாந்து நகரில் கடந்த வியாழனன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் […]
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது. அதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள். அணிக்கு ’தல’ தோனி மீண்டும் கேப்டனாகி இருக்கிறார். ’சின்ன தல’ ரெய்னா, சுழல்கள் ஜடேஜா, ஹர்பஜன் சிங், கரண் சர்மா, ஆல் ரவுண்டர் […]
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரர்களில் ஒருவராக “இக்விடாஸ்’ நிதி நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் அதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களான முரளி விஜய், டுவைன் பிராவோ பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் டுவைன் பிராவோ, “இந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலம் […]
‘பி’ க்ரேட் ஒப்பந்தத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை,கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இதனால், ஐ.பி.எல் போட்டியில் ஷமி பங்கேற்க இருந்த சிக்கல் விலகியுள்ளது. முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், கடந்த சில நாட்களுக்கு முன் ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் ஒன்றாக, பாகிஸ்தான் நபரிடம் இருந்து மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட பணம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஷமியின் ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது. மேலும், இது தொடர்பாக […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி தமிழில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள, நான் வந்துட்டேன்னு சொல்லு, தமிழின் அன்பு உடன் பிறப்பெல்லாம் எப்படி இருக்கீங்க மக்கா ? என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங். அண்மைக்காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்தார். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது. இதனால் மிகுந்த […]
ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு எஸ்.சி/எஸ்.டி. […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) , இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை ஏதும் இல்லை என்று இன்று தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரின் மனைவி கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பிசிசிஐ அமைப்பின் ஊழலுக்கு எதிரான அமைப்பு இந்த அனுமதியை அளித்தது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்திலும் முகமது ஷமியின் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. இப்போது, […]