தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும், கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவர் என்னும் புயல் கரையை கடந்த நிலையில், இந்த புயலினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக தற்போது வங்கக்கடலில் புதியதாக உருவாகவுள்ள புரவி புயலானது, நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும. இந்த புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, பின்னர் குமரி பகுதிக்கு […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திக் கொண்டிருக்கு நிவர் புயலுக்கு பெயர் சூடிய நாடு எது? அந்த பெயரின் பின்னணி என்ன? வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது புதுச்சேரியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் கரையை நெருங்க நெருங்க அதன் பாதை வடமேற்கு நோக்கி மாறலாம் என சொல்லப்படுகிறது. நாளை கரையை கடக்கும் புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது எந்த நாடு என்றும் அதன் பின்னணி […]
புயல் எவ்வாறு உருவாகிறது, கரையை கடக்கும் முன் இது எந்தெந்த நிலையில் கடந்து வருகிறது. எவ்வாறு இந்த புயல் கரையை கடக்கிறது என்று பார்க்கலாம். இன்று பலருக்கும் புயல் எப்படி உருவாகிறது? எப்படி கரையை கடக்கிறது? என தெரிவதில்லை. காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சலனம்’. ஈரக்காற்றை பொறுத்தவரையில், அது வெகு உயரம் செல்லாமல், வானில் தாழ்விடங்களில் தாங்கும். இதனால், காற்றின் அழுத்தம் அதிகரிப்பதால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இந்த காற்றானது மணிக்கு […]
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு நீராதாரமாக விளங்க கூடிய முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த […]
தொடர்மழையானது விட்டுவிட்டு, கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், நாளை காலை மழை இரண்டு மடங்காக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நாமக்கல் சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற […]
6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 அணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]
காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், முதல் நாளிலேயே தலைநகர் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]
தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்களூக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனோடு மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாக மையம் தெரிவித்துள்ளது. இதனால் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி ,திருவண்ணமாலை ,காஞ்சிபுரம்,வேலூர், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகமெங்கும் அநேக மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அதன்படி சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா, ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம், […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவின் படி மாவட்ட வாரியாக உள்ளாட்சி,வருவாய்,பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து பணிகளை துரித வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சுகாதார பணியாளர் குழு 24 மணி நேரமும் மீட்பு பணியில் தயாராக இருக்க வேண்டும் என்றும் மருத்துமனைகளில் ஜென்ரேட்டர், மருந்துகள் இருப்பு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்ய வேண்டும் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர், புதுக்கோட்டை திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் மற்ற […]
தமிழகத்தில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், […]
தலைநகர் சென்னையில் மிதமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கோவை மாவட்டங்களில் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில் அதிகாலை முதலே தலைநகர் சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் மழை […]
வடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியவில் தற்போது தென்மேற்கு பருவமழையின் சூழல் தொடங்க உள்ளது என்றும் வடகிழக்கு பருவமழை அக்.,25ம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும், அந்தமான், நிக்கோபார் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா […]
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் : வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறாக கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகெங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு […]