கென்யாவின் முன்னாள் மராத்தான் வில்சன் கிப்சாங்கிற்கு ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்து விபத்தின் போலி புகைப்படத்தைப் பயன்படுத்திய போன்ற காரணங்களுக்காக நான்கு ஆண்டு தடை.
கடந்த 2012 -ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் கிப்சாங். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு பிரிவிற்கு முறையாக தெரியப்படுத்தவில்லை. மேலும், சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளார்.
கடந்த 2019 மே 17 அன்று சோதனைக்கு அழைத்த போது விபத்து நடந்தாக கூறி காரணமாக சோதனைக்கு வரவில்லை, விபத்துக்குள்ளான புகைப்படத்தை ஊக்கமருந்து எதிர்ப்பு பிரிவிற்கு அனுப்பி உள்ளார். ஆனால், அந்த புகைப்படம் ஆகஸ்ட் 19, 2019 அன்று ஏற்பட்ட விபத்தில் எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோல 4 முறையும் தவறான தகவல் கொடுத்துள்ளார்.
கடந்த 13 மாதங்களில் 4 முறை அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…