kl rahul about ind vs sa [file image]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தனர்.
இந்த இரண்டாவது போட்டி மிகவும் குறைவான நேரத்திலே நடந்து முடிந்தது. குறிப்பாக சொல்ல போனால் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டு முடிந்த டெஸ்ட் போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய கே.எல்.ராகுல் “போட்டியில் விளையாடும் போது டாஸ் போடப்பட்டதற்குள் போட்டியே முடிந்துவிட்டது போல இருக்கிறது என” கூறியுள்ளார்.
IndVsSA: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் “கேப்டவுனில் நாங்கள் முதல்முறையாக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம். போட்டியில் வெற்றிபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இங்கு பலமுறை விளையாடி இருக்கிறோம். ஒவ்வொரு முறையிலும் பேட்டிங் சரியில்லாத காரணத்தால் சில போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்கிறோம்.
கேப்டவுனை யாராலும் புரிந்துகொள்ளவே முடியாது. உணர்ச்சிகளின் அடிப்படையில், நேர்மையாக, யாராலும் புரிந்து கொள்ள முடியாது. டாஸ் இப்போதுதான் நடந்தது அதற்குள் போட்டியே முடிந்துவிட்டது போல தெரிகிறது. ஆனால், இந்த முறை வெற்றிபெற்றுள்ளது நாங்கள் மகிழ்ச்சியாக பார்க்கிறோம்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நம் நாட்டிற்காக விளையாடுவதை நாங்கள் ரொம்பவே எவ்வளவு மதிக்கிறோம். எனவே, இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் எங்களுக்கு ரொம்பவே முக்கியம் அதனை நினைத்து தான் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகிறோம்” எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…