Neeraj Chopra
கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியில் உள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நிராஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
அதன்படி, நிராஜ் சோப்ரா 88.88 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் வென்றுள்ளார். அவரைத்தொடர்ந்து, இந்தியாவின் ஜெனா கிஷோர் குமார் 87.54 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். 82.68 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்த ஜப்பான் வீரர் ரோட்ரிக் ஜென்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதனால் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் இரண்டு பதக்கங்கள் சேர்ந்துள்ளது. இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தமாக 81 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இன்றைய நாளில் இந்தியா ஒரே பதிப்பில் தனது சிறந்த ஆசிய விளையாட்டு பதக்க எண்ணிக்கை சாதனையை முறியடித்துள்ளது. அதன்படி, இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்கள் வென்றது. தற்போது, 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 81 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…