அன்று தடை செய்யப்பட்ட அசாருதீன்இன்று கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ..!

Published by
murugan

ஐதராபாத் உள்ள கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியானது.இதில் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் மற்றும் கே.திலிப் குமார் ஆகியோர் நின்றனர்.

அசாருதீன் 223 வாக்குகளில் 147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகாஷ் சந்த் ஜெயின்  73 வாக்க்கும் , திலிப்  3 வாக்குகள் பெற்றனர்.அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி    6,216 ரன்களும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9,378 ரன்களும் குவித்தார்.

மேலும் அசாருதீன் தலைமையில் 1992, 1996 மற்றும் 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அவரது தலைமையில் விளையாடியது.

2000-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பணம் வாங்கி கொண்டு மேட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

தனக்கு  விதித்த வாழ்நாள் தடையை எதிர்த்து ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம்  அவருக்கு வழங்கிய வாழ்நாள் தடையை நீக்கியது.

2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்  தொகுதிக்கு  எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

58 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

1 hour ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

4 hours ago