ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு – BCCI அறிவித்த ரொக்கப்பரிசு..!

Default Image

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய வீரர்,வீராங்கனைகளுக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு தொகையை அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 120 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.அதன்படி,பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும்,பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலமும்,குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா வெண்கலமும்,41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தஹியா வெள்ளியும்,பஜ்ரங் புனியா வெண்கலமும் பெற்றிருந்தனர்.

இதனையடுத்து,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சுதந்திர இந்தியாவின் முதல் தங்கப்பதக்கதை ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வென்று சாதனை புரிந்தார்,மேலும்,தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம்,2 வெள்ளி,4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்றுள்ளது.

இவ்வாறு,ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த  வீரர்,வீராங்கனைகளை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும்,சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளன.

இந்நிலையில்,ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய வீரர்,வீராங்கனைகளுக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா,தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு,மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியாவுக்கு தலா ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

அதேபோல,வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ.1.25 கோடி வழங்கப்படும். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டுக்கு வெற்றி தேடித் தந்தமைக்கான கவுரவம் இது.

மேலும்,டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் நமது வீரர்கள், வீராங்கனைகள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளனர்.அவர்களின் சிறந்த முயற்சிகளை ஒப்புக்கொள்கிறோம்,பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவிப்பதில் பிசிசிஐ மகிழ்ச்சியடைகிறது”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war