ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஓய்வு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் பல இளம் வீரர்களும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். இந்த அணியில் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டிசம்பர் 26-ம் தேதி (அதாவது நாளை) செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் 2-வது போட்டி ஜனவரி 3-ம் தேதி நியூலேண்டில் நடக்கிறது.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இதுவரை மொத்தம் 28 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 25 போட்டிகளின் முடிவுகள் வந்த நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடர் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை 42 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. தென்னாப்பிரிக்கா 17 டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
சாதனை படைக்கபோவது யார்..?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்டில் அதிக சதம் அடித்த சாதனை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் பெயரில் உள்ளது. ஜாக் காலிஸ் 7 சதங்கள் அடித்துள்ளார். அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 7 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணிக்காக சதம் அடித்ததில் வீரேந்திர சேவாக் இரண்டாவது இடத்தில் உள்ளார். முகமது அசாருதீன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனை யார் பின்னுக்கு தள்ளுவது என்பதில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு பேட்ஸ்மேன்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா 3 சதங்களை அடித்துள்ளனர்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 16 இன்னிங்சில் 678 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 24 இன்னிங்ஸ்களில் 1236 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலியும் 3 சதங்கள் அடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்தியர்கள்:
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…