இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகின்றது. அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தவாறு அந்த அணி பேட்டிங்க் செய்து வருகிறது.இந்திய அணி பவுலிங்க் செய்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பேஜ் அணிந்து களமிறங்கி விளையாடி வருகின்றனர்.ஏன் இந்திய அணி இவ்வாறு கருப்புப் பேஜ் அணிந்து விளையாடி வருகிறது என்றால் அதற்கு காரணம் பாபு நட்கர்னி
இவர்தான் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சமீபத்தில் தான் அவர் இறந்தார் அவருடைய மறைவுவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அவருக்கு மரியாதை செலுத்துகின்ற வகையிலும் கையில் கறுப்பு பேஜ் அணிந்து இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் பாபு நட்கர்னி இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த சுழற்பந்து வீச்சாளராவார்.இவர் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,414 ரன்களை எடுத்து கொடுத்துள்ளார் அதோடு 88 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.
மும்பைம் பூர்வீகமாக கொண்டநட்கர்னி 191 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளையும், 8,880 ரன்களையும் எடுத்துள்ளார்.கடந்த 1955-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தான் முதன் முதலில் டெஸ்ட் போட்டி வாழ்க்கையை தொடங்கினார். அதே போல் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நட்கர்னி தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் அதே நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே 1968-ம்ஆண்டு எம்ஏகே பட்டோடி தலைமையில் கடைசியாக ஆக்லாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடி ஓய்வு பெற்றார்.அவர் சமீபத்தில் மறைந்தார் அவருக்கு மரியாதை செலுத்தவே இந்திய அணியினர் கருப்பு பேஜ் அணிந்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…