இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்வதற்கு அதிக தொகையை பெறும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.
சமூக வலைத் தளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராமில் அரசியல் தலைவர்கள் , தொழிலதிபர்கள், நடிகை , நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கணக்குகளை தொடங்கி பதிவுகளையும் , புகைப்படங்கள் பதிவு செய்து வருகின்றன.
இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமை 3.6 கோடி பேர் பின் தொடருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்வதற்கு ரூ.1,35,66,749 பெறுகிறார்.
முதலிடத்தில் கிறிஸ்டினோ ரொனால்டோ ரூபாய் 6,73,49,082 பெறுகிறார்.இரண்டாவது இடத்தில் கால்பந்து வீரர் நெய்மரும் , மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியும் , நான்காவது இடத்தில் டேவிட் பெக்காமும் உள்ளார்.
முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள விளையாட்டு வீரர்களில் விராட் கோலி மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…