இந்திய அணிக்கு 159 இலக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னிற்கு அவுட் !

Published by
Dinasuvadu Web

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடயேயான மூன்றாவது டி20 கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு பேட்டிங்கை தேர்வு செய்தது .

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன்  களமிறங்கியது  மேற்கிந்திய தீவு. பிராண்டன் கிங்(42) கைல் மேயர்ஸ்(25) அதிரடியாக விளையாடினர்.முதல் விக்கெட்டாக மேயர்ஸ் 55 ரன் இருக்கும் பொழுது  ஆட்டமிழக்க ஜான்சன் சார்லஸ் 12 ரன்னிற்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 20 ரன்னிற்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால் ரோவ்மன் பவல் எதிர்பார்க்காத ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 19 பந்துகளை சந்தித்த பவல் 40 ரன்களை எடுத்தார்,இதில் 3 சிக்ஸர் 1 பவுண்டரி எடுத்து இறுதி வரை ஆதமிழக்காமல் இருந்தார்.

ஹெட்மியர் 9 ரன்னிற்கு ஆட்டமிழக்க ரொமாரியோ ஷெப்பர்ட் 2 ரன்களை எடுத்தார்.இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும

அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.இஷான் கிஷனுக்கு பதிலாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார்.

ஆனால் அவர் முதல் ஓவரில் இரண்டு பந்துகள் மட்டும் சந்தித்து 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனைத்தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கி அதிரடியாக விளையாடி வருகிறார் 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய ஆணை 33 ரன்களை எடுத்துள்ளது.

  • சூர்யகுமார் யாதவ் 24(13)
  • சுப்மன் கில் 6(10)

வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன்(wk), ரோவ்மன் பவல்(c), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்

இந்தியா ;சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(c), சஞ்சு சாம்சன்(wk), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்

Published by
Dinasuvadu Web

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

4 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

4 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

5 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

5 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

6 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

6 hours ago