தென்னாபிரிக்கா 67.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுத்தனர். இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மீதம் இருந்த நேரத்தில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், தென்னாபிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கு இருந்தது. அப்போது மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டது. பின்னர், களமிறங்கிய தென்னாபிரிக்கா நிதானமாக விளையாடி 67.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…