INDvsWI: ரன்களை குவித்த பூரன்-பொல்லார்ட் ! இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்கு

Published by
Venu
  • இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
  • 3 வது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 315 ரன்கள் அடித்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று  3 வது ஒருநாள் போட்டி  ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன்  விராட்  கோலி பந்து வீச முடிவு செய்தார்.இந்திய அணியில் தீபக் சாகருக்கு பதிலாக சைனி சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ,மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடங்கியது.ஆனால் அந்த அணி ஆரம்பத்தில்  இந்திய அணியின் பந்துவீச்சில் சொதப்பலாக விளையாடியது.இதன் விளைவாக தொடக்க ஆட்டக்காரர்கள் லீவிஸ் மற்றும் ஹோப் ஆமை வேகத்தில் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தனர். லீவிஸ் 21 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் சைனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஹோப் 42 ரன்களில் சமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

இதன் பின்பு களமிறங்கிய சேஸ் மற்றும் ஹெட்மயர் ஜோடி ஓரளவு நிலைத்து நின்று ஆடினார்கள்.ஆனால் சேஸ் 38 ரன்கள் மற்றும்  ஹெட்மயர் 37 ரன்களில் வெளியேறினார்கள்.நிதானமாக விளையாடி கொண்டிருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரன்னை உயர்த்துவதற்கு கேப்டன் பொல்லார்ட் மற்றும் பூரன் பொறுப்புடன் விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்கள்.பொறுப்பாக விளையாடிய பூரன் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.ஆனால் 89 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பூரன் விக்கெட்டை பறிகொடுத்தாலும் கேப்டன் பொல்லார்ட் பொறுப்பாக விளையாடி அவரும் அரை சதம் அடித்தார்.

இறுதியாக மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஒவர்கள் முடிவில்  5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் சைனி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக பூரன்  89 ரன்கள்,பொல்லார்ட் 74*ரன்கள் அடித்தார்கள். இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

12 minutes ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

1 hour ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

2 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

3 hours ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

3 hours ago