டப்லினில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 33 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
அயர்லாந்து – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அயர்லாந்தின் டப்லினில் நேற்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியினர் முதலில் பந்துவீச தீர்மானித்தனர்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்கள் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில்,ஐடன் மார்க்ரம் நிதானமாக விளையாடி அணிக்கு 39 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின்னர்,தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.அயர்லாந்து அணி வீரர் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து,166 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியினர் பால் ஸ்டிர்லிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து கெவின் ஓ பிரையனும் ரபாடாவின் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
இவர்களை தொடர்ந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 22 ரன்களிலும்,ஹேரி டெக்டர் 36 ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதன்மூலம்,அயர்லாந்து அணி தோல்வியை நெருங்கியது.
இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.மேலும்,தென் ஆப்பிரிக்க அணி வீரர் தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம்,நடப்பு ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த முன்னணி வீரராக ஷம்ஸி உள்ளார்.
இதனால்,தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றியைக் கைப்பற்றியது.இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…