டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. டெல்லி அணி ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு டெல்லிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி அணி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது அக்சர்படேல் தனிமைப்படுத்தப்பட்டார். டெல்லி அணியின் மருத்துவக் குழு ஆக்சருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம் என டெல்லி அணி தெரிவித்துள்ளது.
டெல்லி அணியில் தற்போது வேறு எந்த வீரரும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ரானாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…