மூன்று தோல்விகளுக்குப் பிறகு ஒரு சுற்றுலா ..! அப்படி மும்பை அணி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : ஐபிஎல்லில் மும்பை அணி வீரர்கள் 3 தோல்விக்கு பிறகு சுற்றுலா சென்று வந்ததை மும்பை அணி X தளத்தில் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை முதல் வெற்றியைப் பெறவில்லை. இதனால் மும்பை அணி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணியின் நிர்வாகம் மும்பை வீரர்களுக்கு தொடர் தோல்வியின் மன அழுத்தத்தை போக்குவதற்காக ஜாம்நகரருக்கு சுற்றுலா செல்லவைத்துள்ளனர்.

அந்த வீடியோவையும் மும்பை அணி நிர்வாகம் தங்களது X தளத்திலும் பகிர்ந்துள்ளார்.  அந்த வீடியோவில் ரோஹித் ஷர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் கட்டி அனைத்து ஒன்றாக மகிழ்ச்சியாக சுற்றுலாவை களிக்கும் வகையில் இருக்கிறது. இதை கண்ட சில உண்மையான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள் போட்டியை வெற்றி பெறாமல் எதற்கு இப்படி சுற்றுலா ? என்று கேலி செய்தும் வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு பிறகு அடுத்த  6 நாட்கள் போட்டிகள் இல்லாமல் இருப்பதால். இந்த ஆறு நாள் இடைவேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஜாம்நகரில் சுற்றுலா சென்றதாக தகவல் வெளியாகி வந்தது. அதை உறுதி படுத்தும் வகையில் இன்று அவர்கள் சுற்றுலா சென்ற வீடியோவை சமூகத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியானான வலுவான மும்பை அணிக்கு இந்த ஆண்டு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால், இது மும்பை அணிக்கு புதிதான விஷயம் இல்லை, இதற்கு முன் ஒரு ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இது போல முதலில் 5 போட்டிகளில் தோல்வியை பெற்று அதன் பிறகு அந்த தொடரில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

3 hours ago

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

4 hours ago

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

6 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

6 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

7 hours ago

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

7 hours ago