வெற்றியின் குதூகலம்! மனைவிக்கு வீடியோ கால் செய்த விராட் கோலி..வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!

Published by
பால முருகன்

Virat Kohli : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்ற பிறகு விராட் கோலி தனது மனைவிக்கு வீடியோ  கால் செய்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் ஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து பஞ்சாப்பை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை  எடுத்திருந்தது.

அதன்பிறகு 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி  19.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று பெங்களூர் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து விராட் கோலி உடனடியாக தனது மனைவிக்கு வீடியோ கால் செய்தார். வீடியோ கால் செய்த பிறகு செல்லமாக பேசிக்கொண்டு மனைவிக்கு பிளைன் கிஸ் கொடுத்தார், கொடுத்துவிட்டு தனது மகள் மற்றும் மகனையும் பார்த்து க்யூட்டாக செய்கையும் காட்டினார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்த பலரும் விராட் கோலி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்காரு என்பது போல கூறிவருகிறார்கள். மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி அட்டகாசமாக விளையாடினார் என்றே கூறலாம். அதன்படி, 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரி 2 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Published by
பால முருகன்

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

41 minutes ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

1 hour ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

2 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

4 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

5 hours ago