ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். இதில் ஏபி டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75* ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடுத்தவுடன் பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி ஏபி டிவில்லியர்ஸ்ஸை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது ” முதலில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து விக்கெட்களை இழந்தோம் அடுத்ததாக ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடிதன் மூலம் அணிக்கு நல்ல ரன் கிடைத்தது. ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை இருந்தாலும் அவர் இப்போது சிறப்பாக விளையாடுகிறார். இனி அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடமாட்டார் என்று நினைக்கவில்லை. ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…