virat kohli Sunil Gavaskar [file image]
விராட் கோலி : நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பார்ம் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முதல் போட்டியில் 1, 2-வது போட்டியில் 4, மூன்றாவது போட்டியில் 0 என மொத்தமாக மூன்று போட்டிகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருக்கிறார்.
விராட் கோலி பார்ம் சரில்லை என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்து இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் காவஸ்கர் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனில் காவஸ்கர் ” விராட் கோலியின் தற்போதைய ஃபார்மைப் பொறுத்தவரை கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் கண்டிப்பாக வரும் போட்டிகளில் பழைய பார்முக்கு வருவார்.
நீங்கள் உங்களுடைய நாட்டிற்காக விளையாடும்போது, போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். விராட் கோலி பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இப்போது தான் தொடங்கி இருக்கிறது. இன்னும் பல போட்டிகள் இருக்கிறது. எனவே, பொறுமை ரொம்பவே முக்கியமான ஒன்று. இது விராட் கோலிக்கு ரொம்பவே அதிகமாக இருக்கிறது என்று நான் உணர்கிறேன்.
நடந்து முடிந்த இந்த மூன்று போட்டிகளில் விராட் கோலி குறைவான ரன்களை எடுத்து ஒழுங்காக விளையாடாமல் ஆட்டமிழந்ததால் அவர் நல்ல பேட்ஸ்மேன் இல்லை என்று ஆகிவிடுமா?. அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை நாம் கவனத்தில் வைத்து கொள்ளவேண்டும். கண்டிப்பாக வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார். அவர் மீது நாம் நம்பிக்கை காட்ட வேண்டிய அவசியம் இல்லை, விரைவில் அவர் நன்றாக வருவார் ” என்றும் சுனில் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…