Irfan Pathan[file image]
Irfan Pathan : இர்பான் பதான், நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வாலை பரிந்துரைத்துள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியில் இடம் பெறுவதற்காகவே வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் , “என்னைப் பொறுத்த வரையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மாவைத்தான் பரிந்துரைப்பேன். ஏன் என்றால் வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மான்களின் தாக்கம் தொடக்கத்தில் இருக்க வேண்டும் என்பதால் தான். மேலும், இன்னொரு விஷயம் ஜெய்ஸ்வால் இந்திய அணியில் விளையாடினால்.
நீங்கள் அவரை ஆறாவது பந்துவீச்சாளராக கூட அணியில் வைத்திருக்கலாம். மற்றபடி அணியில் இருக்கும் பேட்டிங் ஆர்டரை பார்த்தால் யாரும் பந்து வீச மாட்டார்கள். நீங்கள் முதல் 6 பேட்ஸ்மேன்களை பார்த்தல் யாரும் பந்து வீசுவதில்லை ஜெய்ஸ்வாலை தவிர. அது தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு நமக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதை தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே என்னைப் பொறுத்தவரை, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கி கோலி அவர்களை தொடர்ந்து களமிறங்க வேண்டும். அதுவே இந்திய அணிக்கு பக்கபலமாக அமையும்”, என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரஸ் ரூம் ஷோவில் இர்பான் பதான் கூறி இருந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…