ஆஷஸ் தொடர்: 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 282 ரன்கள் முன்னிலை..!

Published by
murugan

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர்நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழந்து 221 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், நேற்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டை பறித்தனர். மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

சிறப்பாக விளையாடி டேவிட் மலான், ஜோ ரூட் ரன்கள் குவித்தனர். இருப்பினும்  டேவிட் மலான் 80 , ஜோ ரூட் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் இறங்கிய கிறிஸ் வோக்ஸ் 24, பென் ஸ்டோக்ஸ் 34 ரன்கள் எடுக்க இறுதியாக இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.  மிட்செல் ஸ்டார்க் 4, நாதன் லயன் 3,  கேமரூன் கிரீன் 2 விக்கெட்டை பறித்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸை 237 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர்  13 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து, 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி  17 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் மார்கஸ் ஹாரிஸ் 21*, மைக்கேல் நெசெர் 2 * ரன்கள் எடுத்து  ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

ராமதாஸ் vs அன்புமணி : தனித்தனியாக கூட்டத்தை நடத்துவதால் நிர்வாகிகள் குழப்பம்!

ராமதாஸ் vs அன்புமணி : தனித்தனியாக கூட்டத்தை நடத்துவதால் நிர்வாகிகள் குழப்பம்!

சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…

25 minutes ago

இனிமே வரிகட்டணும்… ஜப்பான், தென்கொரியப் 25 % வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

50 minutes ago

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

1 hour ago

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

11 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

12 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

13 hours ago