Ashes : கை கொடுத்த ஸ்டார்க்; 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸி. அணி 317 ரன்கள்.!

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆல் அவுட்.
இங்கிலாந்தில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி, நேற்று மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதன்படி களமிறங்கிய ஆஸி. அணியில் க்வாஜா 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் வந்த வீரர்களில் லபுஸ்சன் மற்றும் மிட்சேல் மார்ஷ் அரைசதமடிக்க மற்ற வீரர்களும் ஓரளவு நிதானமாக விளையாட ஆஸி அணி நல்ல ஸ்கோரை எட்டியது. கடைசி நேரத்தில் ஸ்டார்க்கின்(36ரன்கள்) ஆட்டம் ஆஸி அணிக்கு ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. பெரிய ஸ்கோரை அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 41 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்களும், பிராட் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.