Asia Cup 2023: இந்தியாவுக்கு எதிராக தோற்றாலும் பரவாயில்லை.. இதை மட்டும் செய்யாதீங்க! பாக்.முன்னாள் வீரர்!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபால், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் சென்ற 30ம் தேதி தொடங்கி, இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானியில் நடந்த முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்பின் நேற்று இலங்கையில் நடந்த போட்டியில் வங்கதேசத்தை சுலபமாக வென்றது இலங்கை அணி.

இதுபோன்று ஆசிய கோப்பை தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு போட்டி தான் இந்தியா – பாகிஸ்தான். வேறு எந்த போட்டிக்கும் இல்லாத அளவுக்கு இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி மிக சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் இருக்கும். இன்று போட்டி ஓய்வு நாள் என்பதால், நாளை நடைபெறும் ஆட்டத்தில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஆசிய கோப்பை தொடரின் 3வது போட்டில், நாளை இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகிறது. இலங்கையில் பல்லேகெல்லே மைதானத்தில் நாளை மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இருப்பினும், நாளை 90% மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், வெற்றியுடன் வரும் பாகிஸ்தான் அணியும், முதல் போட்டியில் பரம எதிரிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியும் தீவிர பயிற்சியில் உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் கூறுகையில், கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி பதற்றம் அடைய வேண்டாம். ஒவ்வொரு போட்டியிலும் குறிப்பாக பரம எதிரியான இந்தியாவுக்கு எதிராக 100% கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆசிய கோப்பை 2023 குரூப் ஸ்டேஜ் மோதலில் மென் இன் கிரீன், மென் இன் ப்ளூ அணிக்கு எதிராக தோற்றாலும் பரவாயில்லை, பாகிஸ்தான் அணியில் விளையாடும் XI-இல் மாற்றங்களை செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

நாளை இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பாகிஸ்தான் 100% தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும். நேபாளுக்கு எதிரான போட்டி, இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள ஆட்டத்திற்கு நல்ல ஒரு தொடக்கமாக அமைந்தது. ஏனெனில், பாகிஸ்தான் அணி மீது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதும் ஒரு தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் 100% கொடுக்க விரும்புகிறோம், அங்கேயும் அதைச் செய்வோம் என்று நம்புகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணி பேலன்ஸ் நிறைந்ததாக இருக்கிறது. உங்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் மிடில் ஆர்டரில் ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.

மேலும், வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சு துறையில் நீங்கள் பலமாக இருக்கிறீர்கள். எனவே அனைத்தையும் கொண்டிருக்கும் நீங்கள் (பாகிஸ்தான்) இந்த கலவையை சிறப்பாக பயன்படுத்தி, இதே அணியை தொடர வேண்டும். அதனால், ஒருவேளை நாம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை, நீங்கள் தற்போது அணியை மாற்றக்கூடாது. ஏனெனில், இந்த நேரத்தில் இதுவே சிறந்த அணியாக இருக்கிறது என கூறினார்.

இதனிடையே, நேபாளுக்கு எதிராக முதல் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டியது. இப்போட்டியில் ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (c), முகமது ரிஸ்வான் (WK), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோருடன் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பலமான அணியாக பாகிஸ்தான் களமிறங்கியது. ஒரு திடமான டாப் ஆர்டர் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சுப் பிரிவு அவர்களின் அணியில் இருப்பதால், மென் இன் கிரீன் நிச்சயமாக ஒரு பலமான விளையாடும் XI-ஐ கொண்டுள்ளது என்றே கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

3 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

3 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

4 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

4 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

5 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

5 hours ago