Asia Cup 2024 [file image]
Asia Cup : இந்த 2024 ஆண்டின் மகளீருக்கான ஆசிய கோப்பையின் அட்டவணையை தற்போது ஆசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 19 தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரை இந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆண்டு முதல் மகளிருக்கான ஆசிய கோப்பையை ஆசிய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இதில் 7 முறை இந்தியா மகிளிர் அணியும், ஒரே ஒரு முறை அதுவும் 2018 ம் ஆண்டு மட்டும் வங்கதேச மகளீர் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று 7-வது முறையாக ஆசிய கோப்பையை தட்டி தூக்கியது. தற்போது, இரண்டு ஆண்டுகள் கழித்து 2024-லில் இலங்கையில் உள்ள தம்புல்லாவில் வைத்து நடைபெறுகிறது. தொடக்கத்தில் 50 ஓவர் (ODI) தொடராக நடைபெற்று கொண்டிருந்த இந்த ஆசிய கோப்பை தொடர் 2012-ம் ஆண்டு முதல் T20 போட்டிகளாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. நடைபெற போகும் இந்த ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியன் ஆன இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், யூஏஇ (ஐக்கிய அரபு நாடு), நேபாள், இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த 8 அணிகளும் 2 குரூப்களாக பிரிந்து விளையாட உள்ளனர். இதில் இந்தியா, பாகிஸ்தான் மகளீர் அணிகள் குரூப்- A பிரிவில் இடம் பெற்று உள்ளது.
ஒவ்வொரு நாளும் தலா இரண்டு போட்டிகள் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியானது வருகிற ஜூலை 21 ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் பிரிவில் இடம் பெரும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். நடைபெற போகும் இந்த ஆசிய கோப்பையை 8-வது முறையாக வேற்று பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய மகளீர் அணியும், ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…