AUSvIND: இன்று தொடங்குகிறது இரண்டாம் டெஸ்ட் போட்டி.. தொடரில் இருந்து விலகிய விராட் கோலி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, மேல்போன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகினார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது.
அதனைதொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னணி வீரர்கள் உட்பட பலரும் இந்திய அணியை வந்த நிலையில், அடுத்தடுத்து நடக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் தீவிரமாக ஆடும் நோக்குடன் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றது.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி இன்று மேல்போன் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது. டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், ரஹானே கேப்டனாகவும்,துணை கேப்டனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.