ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கும் , வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கும் இன்று அதிகாலை மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக பிரிட்னி கூப்பர் 29 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் பறித்தார்கள். இதைத்தொடர்ந்து 82 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தால் 7.3 ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதில் அதிகபட்சமாக அலிஸா ஹீலி 38 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. முதலில் விளையாடிய மூன்று ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா மகளிர் அணி வெற்றி பெற்று.
இதைத்தொடர்ந்து கடந்த 14-ம் தேதி முதல் இன்று வரை விளையாடிய 3 டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் விளையாடிய அனைத்து போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…