கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 389 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.சிறப்பான கூட்டணி அமைத்த இந்த ஜோடியில் பின்ச் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 83 ரன்களில் ரன் -அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஸ்மித் களமிறங்கினார்.ஸ்மித் ஒருபுறம் அதிரடியாக விளையாட அவருக்கு மர்னஸ் நிதானமாக விளையாடி கூட்டணி கொடுத்தார்.அதிரடியாக ஆடிய ஸ்மித் 104 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.29 பந்தில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் குவித்தார்.மர்னஸ் 70 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.இறுதியாக ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 389 ரன்கள் எடுத்தது.களத்தில் ,மோய்சஸ் 2* ரன்களுடனும், மேக்ஸ்வெல் 63 * ரன்களுடனும் இருந்தனர்.இந்திய அணியின் பந்து வீச்சில், முகமது ஷமி ,பும்ரா,பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.இதனையடுத்து 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…