”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
இந்தியாவில் எந்த பகுதியிலும் எதாவது ஒரு பயங்கரவாத சம்பவம் நடந்தாலும் அது போராக கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, இனி தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றால், அது போருக்கு வழி வகுக்கும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, இனி பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றால், அது போராகவே கருதப்படும் என்று உறுதியான எச்சரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. கடந்த மூன்று இரவுகளாக வட இந்தியாவில் உள்ள இராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை முன்னோக்கி நகர்த்தி வருவதாக இந்தியா இன்று முன்னதாக தெரிவித்தது.
இதனால், எல்லை தாண்டிய தொடர்புகளுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் அப்பாவி குடியிருப்புகள் குறித்து வைத்து தாக்கி வருகிறது. இருப்பினும், பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அடையாளம் காணப்பட்ட இராணுவ இலக்குகளில் மட்டுமே இந்திய ஆயுதப்படைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025