இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும், கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இந்திய அணி 63 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது. இதை எடுத்து தொடக்க வீரர் ருதுராஜ், ரிங்கு சிங் இருவரும் சற்று நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜிதேஷ் சர்மா களம் இறங்க களத்தில் விளையாடி வந்து ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 29 பந்தில் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை கொடுத்தார்.
அதில் இரண்டு சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். மறுபுறம் விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா 19 பந்தில் 35 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டைகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டையும், தன்வீர் சங்கா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…