19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா அணியும் நமீபியா அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நமீபியா அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுமோசமாக விளையாடியது.
எந்த வீரரும் சரியாக விளையாடாமல் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இறுதியில் அந்த அணி 33.1 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நமீபியா வீரர் வான் வூரன் 29 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணியின் கலம் விட்லர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதனால் 92 என்ற மிகச்சிறிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்தனர். ஆனால் எதிர்ப்பாரத ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வெளிப்படுத்தியது. தொடர்ந்து ரன்களை எடுத்தாலும் மறுபக்கம் விக்கெட்டையும் விட்டு கொடுத்து கொண்ட இருந்தது. இதனால் சற்று தடுமாறியே ரன்களை சேர்த்தது.
இருந்தும் 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஹக் வெய்ப்ஜென் ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி 39* ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…