#AUSvSA: முதல் வெற்றியை பதிவு செய்யுமா ஆஸ்திரேலியா? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று தொடரின் 10வது லீக் போட்டியானது நடைபெறுகிறது. அதன்படி, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் தேம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.

தென்னாபிரிக்கா அணி கடந்த அக்டோபர் 7ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்பொழுது அதே வேகத்துடன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோத உள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டி காக்,  வான் டெர் டஸ்ஸன் மற்றும் மார்க்கம் ஆகிய மூன்று பெரும் சதம் அடித்து அசத்தியிருந்தனர்.

இதுபோன்று, சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சமயத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என கட்டாயத்தில் உள்ளது.

இதனால் தென்னாபிகாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என வலுவாக இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா (விளையாடும் XI): குயின்டன் டி காக் (w), டெம்பா பவுமா (c), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியா (விளையாடும் XI):  டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

11 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

54 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago