Virat Kohli shivam dube [file image]
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலியின் பார்ம் விமர்சிக்கும் வகையில் இருப்பதால் அவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் சோகத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் வந்தாலும் மற்றோரு பக்கம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி பழைய பார்முக்கு திரும்புவார் என பேசி வருகிறார்கள். குறிப்பாக, சுனில் கவாஸ்கர் கூட பேசி இருந்தார்.
அவரை தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பார்ம் பற்றி பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவரிடம் விராட் கோலி பார்ம் எப்படி இருக்கிறது என்று தொகுப்பாளர் கேட்டுள்ளார். இதற்கு சற்று கடுப்பான ஷிவம் துபே ” முதலில் விராட் கோலியை பற்றி பேச நான் யார்? அவருடைய ஃபார்ம் பற்றி அவர் தான் பேச வேண்டும். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் ஒழுங்காக ரன்கள் எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக வரும் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் விளாசுவார்.
அவர் அப்படி விளையாடும் போது விமர்சனங்கள் எதுவும் இருக்காது. அவர் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாட கூடிய ஒரு வீரர் என்பது எங்களுக்கு தெரியும். கண்டிப்பாக வரும் போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்” என ஷிவம் துபே தெரிவித்துள்ளார். சரியாக விளையாடவில்லை என கோலி மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கும் சூழலில் ஷிவம் துபே இப்படி பேசி இருப்பது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும். 2024 டி20 உலகக் கோப்பையில் இதுவரை அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 3 போட்டிகள் விளையாடி இருக்கும் விராட் கோலி 1, 4 மற்றும் 0 ரன்களைப் பதிவுசெய்து மோசமான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…