KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

ஐபிஎல் தொடரில் இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

CskvsKkr

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இருக்கும் கொல்கத்தா ஆகிய அணிகள் இன்றிரவு 7,30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன.

தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, சென்னை அணி பவுலிங் செய்ய போகிறது.

சென்னை அணி :

கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான அணியில், ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், டெவோன் கான்வே, ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா   ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா அணி :

கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, மணீஷ் பாண்டே, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், மொயின் அலி, ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, வருண் சகரவர்த்தி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியின் போது, பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை கருத்தில் கொண்டு, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது கொல்கத்தாவுக்கு மிகவும் முக்கியம். மறுபுறம், பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றி பெற சிஎஸ்கே அணி முயற்சிக்கும். அதனால், இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது.

புள்ளிகள் பட்டியலில், கே.கே.ஆர் அணி 11 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை கொல்கத்தாமற்றும் சென்னை அணிகள் மோதிய 30 போட்டிகளில் சென்னை அணி 19 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்