பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஏதேனும் காட்சிகள் அல்லது விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் NIA வேண்டுகோள் விடுத்துள்ளது.

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) புதன்கிழமை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ஆயுதப்படை மே 7 அதிகாலையில் தாக்குதல்களை நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய முக்கிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் உடனடியாக தங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, தங்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன என்பத 96549 58816, 011 2436 8800 என்ற எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை வழங்க என்ஐஏ அறிவுறுத்தியுள்ளது.
மேலும், NIA தரப்பில் இருந்து சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ஆதாரம் பெற்றுக்கொள்ளப்படும் என கூறியுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும் அவர்களின் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதிலும் இத்தகைய பங்களிப்புகள் மிக முக்கியமானதாக இருக்கலாம். தாக்குதல் தொடர்பான ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை NIA ஏற்கனவே சேகரித்துள்ளது மற்றும் அவற்றை முழுமையாக ஆய்வு செய்து வருகிறது.