அரசியல் களத்தில் குதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்! நாடாளுமன்ற தேர்தலில் போட்டி..

Shakib Al Hasan

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசியல் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார். அதுவும், வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியில் இணைந்து அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அங்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் என கூறப்படுகிறது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாகிப் அல் ஹசன், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இவர் தலைமையில் வங்கதேச அணி நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. ஆனால், தொடர் தோல்விகளால் பெரிதாக அணி ஜொலிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், இலங்கை வீரர் மேத்யூஸ் “டைம் அவுட்” முறையில் ஆட்டமிழந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்த சூழலில், வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர் ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். அதுவும், வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஷாகிப் அல் ஹசன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அரசியல் வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார்.

இந்தியாவுக்கு இந்த நடுவர் ராசியில்லாதவர்… ‘6 முறை தோல்வி’ கோபத்தில் ரசிகர்கள்..!

ஷாகிப் அல் ஹசனின் வேட்புமனுவை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற வாரியம் உறுதிசெய்ய வேண்டும்.  அப்படி உறுதியானால், அவர் மொத்தம் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஷாகிப் அல் ஹசனின் சொந்த மாவட்டமான மகரா அல்லது தலைநகர் டாக்காவில் போட்டியிடுவார் என நம்புவதாக வங்கதேசத்தில் ஆளும் கட்சியின் இணை பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, சுமார் 170 மில்லியன் மக்கள் வசிக்கும் வங்கதேசத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஹசீனா தலைமை தாங்கி ஆட்சி செய்து வருகிறார். தற்போது வங்கதேசத்திலுள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவிக்கின்றன. அப்படி புறக்கணித்தால் ஷேக் ஹசினா 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kallazhagar 2025
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh