டெஸ்ட் தொடரின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், நாம் சிறந்த ஸ்கோரை எதிர்பார்க்க வேண்டுமானால், அதற்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடவேண்டும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி, கடந்த 7 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 26 ரன்கள் எடுக்க, விக்கெட்டை இழந்தார். பின் புஜாரா களமிறங்க, அரைசதம் அடித்த சுப்மான் கில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் புஜாரா 9*, ரகானே 5* ரன்களுடன் உள்ளனர்.
இந்தநிலையில் ஜடேஜா, இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாம் சிறந்த ஸ்கோரை எதிர்பார்க்க வேண்டுமானால், அதற்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடி, ரன்களை குவிக்க வேண்டும். இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி போட்டியை மேலும் எடுத்துச் செல்வதற்கு ஒரு பேட்ஸ்மேன் அல்ல, ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் தங்களின் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஜடேஜா, பொறுப்புடன் விளையாடினால் எளிதாக ரன்கள் உயரும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…